செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது.
'அசுரன்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தைத் தயாரித்து வருகிறார் தாணு. மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர்.
முதலில் தாணு தயாரிப்பில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். அதில் 'அசுரன்', 'கர்ணன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படமும் ஒன்று. அதன் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன.
ஷான் ரோல்டன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும், இந்தப் படத்தின் இசைப் பணிகளைக் கவனித்து வந்தார் செல்வராகவன். தற்போது 'அந்தரங்கி ரே' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதற்குப் பிறகு கார்த்திக் நரேன் படத்தை முடித்துக் கொடுக்கவுள்ளார்.
கார்த்திக் நரேன் படத்தை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் தனுஷ். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago