லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்துக்கு 'ப்ளூ இங்க்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.
நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை, இயக்குநர் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி' மற்றும் 'ஹவுஸ் ஓனர்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இதில் 'ஹவுஸ் ஓனர்' படம் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. மேலும், இந்திய பனோரமா பிரிவிலும் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்குத் தயாராகி வந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இது தொடர்பான அறிவிப்பு இன்று (நவம்பர் 27) மாலை 5:30 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் நடந்த உண்மை சம்பவத்தைத் தழுவி இந்தப் படத்தை உருவாக்கவுள்ளார். இதற்கு 'ப்ளூ இங்க் எனத் தலைப்பிட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த தலைப்புக்குக் கீழே 'இந்த நீலம் சிவப்பு' என்று குறிப்பிட்டுள்ளது படக்குழு
தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு படப்பிடிப்புக்குச் செல்ல திட்டமிட்டுள்ளது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago