மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்

By செய்திப்பிரிவு

பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் நாயகி மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.

போயபடி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தலால் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துப் படக்குழு திரும்பியது. நாயகியை ஒப்பந்தம் செய்யாமலேயே முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

இது இரண்டு நாயகிகளைக் கொண்ட கதை என்பதால், பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. முதலில் 'பிசாசு' படத்தில் நாயகியாக நடித்த பிரயாகா ஒப்பந்தமானார். ஆனால், தேதிகள் பிரச்சினைகள் காரணமாக படத்திலிருந்து அவர் விலகவே, சயிஷா சைகல் ஒப்பந்தமானார். இதனை போயபடி சீனு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது சயிஷா சைகலும் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரயகா ஜெய்ஷ்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இன்னொரு நாயகியாக பூர்ணா நடிக்கவுள்ளார். துவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்