நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஆசிஷ் வித்யார்த்தி.
'தில்' படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ஆசிஷ் வித்யார்த்தி. அதற்குப் பிறகு தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் வில்லனாக நடித்துள்ளார். 2015-ம் ஆண்டு தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
'அனேகன்' படத்துக்குப் பிறகு, சரியான கதைகள் எதுவும் அமையாத காரணத்தால் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஆசிஷ் வித்யார்த்தி. இந்நிலையில், ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்து வரும் 'எக்கோ' படத்தில் தற்போது ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
'எக்கோ' கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால், உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை நவீன் கணேஷ் இயக்கி வருகிறார்.
» முதல் பார்வை: மிடில் கிளாஸ் மெலடிஸ்
» ’’ ’டிக்... டிக்... டிக்...’ வில்லன் என்னுடைய நண்பன்!’’ - இயக்குநர் பாரதிராஜாவின் திரை அனுபவங்கள்
ஒளிப்பதிவாளராக கோபிநாத், இசையமைப்பாளராக ஜான் பீட்டர், எடிட்டராக சுதர்ஷன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago