ஸ்ருதி ஹாசன் ட்வீட்; 'லாபம்' படக்குழுவினர் மீது அதிருப்தியா?

By செய்திப்பிரிவு

'லாபம்' படக்குழுவினர் மீது ஸ்ருதி ஹாசன் அதிருப்தியில் இருந்ததால்தான், அந்த ட்வீட்டை வெளியிட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லாபம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பதிவில், "கோவிட் என்பது ஆரோக்கியத்துக்கு வரும் தீவிரமான ஒரு ஆபத்து. இந்தத் தொற்றுப் பிரச்சினை இன்னும் முடியவில்லை.

விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்படவில்லை என்றால் ஒரு தனி நபராக, நடிகையாக எனது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க எனக்கு உரிமை இருக்கிறது" என்று ட்வீட் செய்திருந்தார்.

பலருமே இது வழக்கமாக அவர் வெளியிட்ட விழிப்புணர்வு ட்வீட் என்றுதான் கருதி வந்தார்கள். ஆனால், 'லாபம்' படக்குழுவினர் மீதான அதிருப்தியில்தான் இந்த ட்வீட்டை ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 'லாபம்' படப்பிடிப்பில் விஜய் சேதுபதியைப் பார்க்க ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்து செல்ஃபி எடுத்து, கை குலுக்கிவிட்டுத் திரும்பியிருக்கிறார் விஜய் சேதுபதி.

ரசிகர்களைச் சந்தித்துவிட்டு மீண்டும் வந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இதனால் கடும் அதிருப்தியடைந்தே ஸ்ருதிஹாசன் ட்வீட் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 'லாபம்' படக்குழுவினரும் அமைதி காத்து வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் 'லாபம்' படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

மேலும்