எழில் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் கவுதம் கார்த்திக் - பார்த்திபன் இணைந்து நடிக்கவுள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ஆயிரம் ஜென்மங்கள்' மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஜகஜால கில்லாடி' ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் எழில். இரண்டு படங்களின் அனைத்து பணிகளுமே முடிவடைந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் எழில் தனது அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார்.
காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் பார்த்திபன் இருவரும் நடிக்கவுள்ளனர். சென்னையில் நவம்பர் 19-ம் தேதி இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. ராஜேஷ் குமார் எழுதியுள்ள நாவலின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் எழில். க்ரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது.
சாய் ப்ரியா தேவா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் கவுதம் கார்த்திக், பார்த்திபனுடன் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் வசனங்களை சி.முருகேஷ் பாபு எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளராக குருதேவ், இசையமைப்பாளராக இமான், எடிட்டராக கோபிகிருஷ்ணா, கலை இயக்குநராக என்.ஆர்.சுகுமாரன் ஆகியோர் பணிபுரியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago