குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய பிரசன்னா

By செய்திப்பிரிவு

குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு நடிகர் பிரசன்னா 1.5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பத்ரி இயக்கத்தில் பிரசன்னா, யோகி பாபு, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'நாங்க ரொம்ப பிஸி'. சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு, பின்பு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது பிரசன்னா, ஒரு குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவியிருப்பது தெரியவந்துள்ளது.

'நாங்க ரொம்ப பிஸி' படத்தின் படப்பிடிப்பு செட்டிநாடு மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது ஒரு தம்பதியர் பிரசன்னாவைச் சந்தித்துள்ளனர். அவர்களோ புகைப்படம் எடுக்க வந்துள்ளனர் என நினைத்து, புகைப்படம் எடுத்துள்ளார் பிரசன்னா.

அந்தச் சமயத்தில் தங்களுடைய குழந்தையின் இதய அறுவை சிகிச்சை தொடர்பான விவரங்களைக் கூறியுள்ளனர். மேலும், அந்தச் சிகிச்சைக்குப் பணமின்றித் தவித்து வருவதை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுடைய குழந்தையின் விவரங்கள் அனைத்தையும் கேட்டு வாங்கியுள்ளார் பிரசன்னா.

பின்பு தனக்குத் தெரிந்த மருத்துவர்கள் மூலமாக விசாரித்துள்ளார். அனைத்துத் தகவல்களையும் உறுதி செய்துவிட்டு, குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு 1.5 லட்ச ரூபாய் உதவி செய்துள்ளார். குழந்தையின் குடும்பத்தினர் பிரசன்னாவின் உதவியால் மிகவும் நெகிழ்ந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்