விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தின் டீஸர், யூடியூப் தளத்தில் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் 'மாஸ்டர்'. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. ஏப்ரல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கி, அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
'மாஸ்டர்' படம் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தது. முதன்முறையாக 'மாஸ்டர்' படத்தின் டீஸரை தீபாவளிக்கு வெளியிட்டது. யூடியூப் தளத்தில் மட்டுமல்லாமல் திரையரங்குகளிலும் வெளியிட்டது.
நீண்ட நாட்களாக 'மாஸ்டர்' அப்டேட் கேட்டு வந்த விஜய் ரசிகர்களுக்கு, இந்த டீஸர் கொண்டாட்டமாக இருந்தது. யூடியூப் தளத்தில் 'மாஸ்டர்' டீஸர் வெளியான 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், 1. மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. தற்போது வரை 'மாஸ்டர்' படத்தின் டீஸர் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வெளியான படத்தின் டீஸர்களில் அதிக லைக்குகளை பெற்ற டீஸர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதுவும் டீஸர் வெளியான ஒரு நாளுக்குள்ளேயே இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இன்னும் அதிகமான சாதனைகளை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கலாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத், கலை இயக்குநராக சதீஷ்குமார் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago