ஆளுமையை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது - லோகேஷ் கனகராஜுக்கு ‘தமிழ்ப்படம்’ இயக்குநர் வாழ்த்து

By செய்திப்பிரிவு

கமல் படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜை தனது ட்விட்டர் பதிவில் பாராட்டியுள்ளார் சி.எஸ்.அமுதன்.

'இந்தியன் 2' படத்துக்கு முன்பாகவே, 'விக்ரம்' என்ற படத்தை தொடங்கியுள்ளார் கமல். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சென்னையிலேயே ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியான போதே, பலரும் ஆச்சரியப்பட்டார்கள். நேற்று டீஸர் வெளியான உடன் பலரும் லோகேஷ் கனகராஜை பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் குறித்து 'தமிழ் படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"பலரும் லோகேஷாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த இளம் வயதிலேயே ஒரு ஆளுமையை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தகுதியுள்ள ஒருவருக்கு அது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த தருணத்தைப் போற்றி பாதுகாத்துக் கொள்ளுங்கள். எங்கள் அனைவரது கனவுகளும் உங்களுக்கு நனவாகியுள்ளது"

இவ்வாறு சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்