குருவுக்குப் பணிவான அன்பளிப்பு: 'விக்ரம்' டீஸர் குறித்து லோகேஷ் கனகராஜ்

By செய்திப்பிரிவு

'விக்ரம்' டீஸர் குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள ட்வீட் பெரும் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் அளித்த பல்வேறு பேட்டிகளில், தான் எந்த அளவுக்கு கமல் ரசிகர் என்பதை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது கமலின் அடுத்த படத்தை இயக்குகிறார்.

இன்று (நவம்பர் 7) கமலின் பிறந்த நாளை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தின் தலைப்பு மட்டுமல்லாது, தலைப்பு அறிவிப்புக்கான டீஸர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

'விக்ரம்' என்று பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒளிப்பதிவு, கமல் நடிப்பு, ரசிகர்களுக்கான காட்சிகள், பின்னணி இசை என எல்லாவற்றையும் பலதரப்பினரும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த டீஸரை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும்போது பதிவிட்ட ட்வீட் பெரும் வைரலாகி வருகிறது.

அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"அன்புள்ள குரு... இது உங்களுக்கு எங்களுடைய பணிவான அன்பளிப்பு. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். தயவுசெய்து எங்களை என்றென்றும் தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்".

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

'விக்ரம்' தொடர்பாக கமல் வெளியிட்ட ட்விட்டர் பதிவு ரீ-ட்வீட்களை விட, லோகேஷ் கனகராஜின் இந்த ட்வீட் அதிகமான ரீ-ட்வீட்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், லோகேஷ் கனகராஜின் நண்பர்கள் பலரும் அவருடைய ஆசை நிறைவேறிவிட்டதாக வாழ்த்துகளைத் தெரிவித்து ட்வீட் செய்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்