'அறம்', 'குலேபகாவலி', 'ஐரா', 'ஹீரோ', 'க.பெ.ரணசிங்கம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் அடுத்ததாக 'மிடில் கிளாஸ்' என்கிற திரைப்படத்தைத் தயாரிக்கிறது. 'டோரா' திரைப்படத்தின் இயக்குநர் தாஸ் ராமசாமி இணைந்து தயாரிக்கிறார்.
முனீஷ்காந்த் ராமதாஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம் எதார்த்தமான, நகைச்சுவை கலந்த, கலகலப்பான குடும்பப் படமாக இருக்கும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது. தாஸ் ராமசாமியின் கௌஷ்துப் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
'களவாணி' படத்தில் உதவி இயக்குநராகவும், 'இது வேதாளம் சொல்லும் கதை', 'பூமிகா' ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய கிஷோர் எம்.ராமலிங்கம் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.
தீபாவளி முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கலக்கப் போவது யாரு' ராமரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, ஆர்வி ஒளிப்பதிவு செய்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago