பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ள சதீஷுக்குத் திரையுலக நண்பர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி இவருக்குத் திருமணம் நடைபெற்றது. 'சிக்சர்' படத்தின் இயக்குநர் சச்சியின் தங்கை சிந்துவைத் திருமணம் செய்தார் சதீஷ்.
திருமணமான சில மாதங்களில் சிந்து கர்ப்பமானார். அவருக்குத் திரையுலக ஈடுபாடு எல்லாம் கிடையாது என்பதால் அவர் தொடர்பான புகைப்படங்கள் எதையுமே சதீஷ் வெளியிடாமல் இருந்தார். இன்று (நவம்பர் 4) சதீஷ் - சிந்து தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சதீஷின் ட்வீட்டைக் குறிப்பிட்டு அவருடன் நடித்த தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பலரும் சதீஷ்- சிந்து தம்பதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
24 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago