ஜெயம் ரவி நடித்துள்ள 'பூமி' திரைப்படம் எப்போது வெளியீடு என்பதில் இன்னும் தெளிவில்லாத நிலையே நீடிக்கிறது.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படம் 'பூமி'. லஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், நிதி அகர்வால், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார்.
இந்தப் படம் மே 1-ம் தேதி வெளியாவதாக இருந்தது. கரோனா அச்சுறுத்தலால் வெளியீட்டுத் திட்டம் மாறியது. கரோனா ஊரடங்கு சமயத்தில் பல்வேறு ஓடிடி தளங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், எதுவுமே முடிவுக்கு வரவில்லை. இதனிடையே, கதை சர்ச்சையில் 'பூமி' படம் சிக்கியதால், வெளியீடு மேலும் தாமதமானது.
பல்வேறு ஓடிடி தளங்கள் தங்களுடைய தீபாவளி வெளியீட்டை உறுதி செய்துவிட்டன. இதனால் 'பூமி' வெளியீடு குறித்துப் படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது, "இன்னும் எந்தவொரு ஓடிடி தளத்துக்கும் படத்தின் ஒளிபரப்பு உரிமையைக் கொடுக்கவில்லை. அனைத்துமே பேச்சுவார்த்தை அளவிலேயே உள்ளது. தீபாவளிக்கு வெளியீடு இல்லை" என்று தெரிவித்தனர்.
இதன் மூலம் டிசம்பர் வெளியீடாக 'பூமி' திரைக்கு வரும் என்று தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago