தமிழில் ரீமேக்காகிறது ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்

By செய்திப்பிரிவு

மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

2019 ஆம் ஆண்டு ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25'. சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இதன் ரீமேக் உரிமைகளைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது இதன் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் கைப்பற்றி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் ரீமேக்கை கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்க அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த சபரி - சரவணன் இருவரும் இயக்கவுள்ளதாகத் தெரிகிறது.

இதில் வெறும் தயாரிப்பை மட்டுமே கவனிக்கவுள்ளாராம் கே.எஸ்.ரவிகுமார். இந்தப் படத்துக்கு முன்பாக கமல் நடித்த 'தெனாலி' படத்தைத் தயாரித்தார் கே.எஸ்.ரவிகுமார். அதற்குப் பிறகு 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' தமிழ் ரீமேக்கைத்தான் கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். இப்போதைக்குத் தமிழில் பல்வேறு படங்களில் நடிகராக கே.எஸ்.ரவிகுமார் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்