சாந்தனு படத்தில் இணைந்த யூ-டியூப் பிரபலம்

By செய்திப்பிரிவு

சாந்தனு, அதுல்யா ரவி நடிக்கும் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தில் தமிழ் யூ-டியூப் பிரபலம் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

'மாஸ்டர்', 'ராவணக் கோட்டம்' படங்களை தொடர்ந்து 'மாஸ்டர்' படத்தில் விஜய்யுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாந்தனு. 'ராவணக் கோட்டம்' படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கப்படவுள்ளது.

இப்படங்களைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கவுள்ள ‘முருங்கைகாய் சிப்ஸ்’ என்ற படத்தில் சாந்தனு ஒப்பந்தமானார். இதில் பாக்யராஜ், அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி, எடிட்டராக ஜோமின் மேத்யூ, கலை இயக்குநராக நர்மதா வேணி, இசையமைப்பாளராக தரண் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய யூ-டியூப் பிரபலம் ஒருவர் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் இதை தனது முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தில் ‘செர்டிஃபைடு ராஸ்கல்ஸ்’ என்ற சேனலின் மூலம் பிரபலமான ஸ்ரீராம் க்ரிஷ் இணைகிறார் என்பதை அறிவிப்பதில் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் மகிழ்கிறது.’ என்று கூறியுள்ளார்.

வீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்