'தளபதி 65' படத்தைப் பேரரசு இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க ஒப்பந்தமாகி, மும்முரமாகப் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், கடைசி நேரத்தில் சன் பிக்சர்ஸ் - ஏ.ஆர்.முருகதாஸ் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால், இயக்குநர் பொறுப்பிலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார்.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸுக்குப் பதிலாக விஜய்யை இயக்கவுள்ளது யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஏனென்றால், முன்னணி இயக்குநர்கள் அனைவருமே அடுத்தடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். இதனால், 'தளபதி 65' படத்தைப் பேரரசு இயக்கவுள்ளார் எனத் தகவல் பரவியது.
'திருப்பாச்சி' மற்றும் 'சிவகாசி' என விஜய்யை வைத்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் பேரரசு. இதற்குப் பிறகு விஜய் - பேரரசு கூட்டணி இணையவே இல்லை. இதனால் 'தளபதி 65' படத்தில் இந்தக் கூட்டணி இணைய வாய்ப்புள்ளது என்று செய்திகளும் வெளியாகின.
» சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தம் எனக்குள் ஓடுகிறது: பாயல் கோஷ்
» காதலருக்கு வாழ்த்து: ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த பூனம் பாஜ்வா
இது தொடர்பாக விசாரித்தபோது, "’மாஸ்டர்’ வெளியாகாத காரணத்தால், விஜய் இன்னும் தனது அடுத்த படம் குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. ஆனால், கண்டிப்பாக பேரரசுவின் படமாக இருக்காது. விஜய் - பேரரசு இருவருமே நீண்ட மாதங்களுக்கு முன்பு சந்தித்தது உண்மைதான். அந்தச் சந்திப்பு இப்போது யாருக்கோ தெரிந்து, படம் பண்ணவுள்ளார்கள் என்று செய்தியாக வெளியாகியுள்ளது" என்றார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago