தமிழில் ரீமேக்காகும் பெங்காலிப் படம்

By செய்திப்பிரிவு

'வின்சி டா' என்ற பெங்காலித் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் வெளியான பெங்காலித் திரைப்படம் 'வின்சி டா'. ருத்ரனில் கோஷ், ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது.

இந்தப் படத்தின் தமிழ் மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற தனஞ்ஜெயன் அணுகியிருக்கிறார். ஆனால், இந்தி ரீமேக் உரிமையை ஏற்கெனவே படக்குழுவினர் விற்றுவிட்டதால், தமிழ் ரீமேக் உரிமையை மட்டும் கைப்பற்றியிருக்கிறார்.

இந்தப் படம் தமிழ் ரீமேக்கிற்கு திரைக்கதை மற்றும் வசனங்களை இயக்குநர் ராம் - தனஞ்ஜெயன் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இது இரண்டு நாயகர்களைக் கொண்ட படம் என்பதால், சில நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

விரைவில் இயக்குநர் மற்றும் நடிகர்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்