திரையுலகுக்கு உதவி: 'நவரசா' ஆந்தாலஜியின் இயக்குநர்கள், நடிகர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திரையுலகிற்கு உதவுவதற்காக, 9 இயக்குநர்கள் ஒன்றிணைந்து ஆந்தாலஜி பாணியில் 'நவரசா' என்ற படத்தை உருவாக்கவுள்ளனர்.

கரோனா அச்சுறுத்தலால் இந்திய அளவில் ஒட்டுமொத்தத் திரையுலகிற்குமே கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்ட பல்வேறு நடிகர்கள் உதவி செய்து வருகிறார்கள். மேலும், கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியுள்ளதால் படப்பிடிப்புகள், இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ஒரு முன்னெடுப்பாக, 'நவரசா' என்ற ஆந்தாலஜி உருவாகி வருகிறது. இதனை இயக்குநர்கள் மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் தயாரித்து வருகிறார்கள். ஜஸ்ட் டிக்கெட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் ஏபி இண்டர்நேஷனல், ஆங்கிள் க்ரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வாகத் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றன.

இந்தத் திரைப்படத்தில் பங்காற்றும் அத்தனை கலைஞர்களும், நிறுவனங்களும், திரைத்துறைக்கு ஆதரவு தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், இலவசமாகப் பணியாற்றியுள்ளனர். காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம், சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த ஆந்தாலஜியில் பணிபுரியும் இயக்குநர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

'நவரசா' ஆந்தாலஜியில் 9 கதைகளை கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இதன் ஒளிப்பதிவாளர்களாக சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியெம், மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, ஹர்ஷ்வீர் ஓபராய், சுஜித் சராங், வி.பாபு, விராஜ் சிங் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இசையமைப்பாளர்களாக ஏ.ஆ.ரஹ்மான், இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன் பணிபுரியவுள்ளனர்.

இந்த ஆந்தாலஜியில் எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், செல்வா, மதன் கார்க்கி, சோமிதரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

அரவிந்த்சாமி, சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி, நித்யா மேனன், பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணா, ரித்விகா, சரவணன், அழகம் பெருமாள், பிரசன்னா, விக்ராந்த், பாபி சிம்ஹா, கவுதம் கார்த்தி, அசோக் செல்வன், ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக், சனந்த், விது மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் இந்த ஆந்தாலஜியில் நடிக்கவுள்ளனர்.

தற்போது ரதிந்தீரன் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோர் தங்களுடைய ஆந்தாலஜியின் படப்பிடிப்பை முடித்துவிட்டனர். இதர இயக்குநர்கள் படங்களின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்