ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் படத்துக்கு 'இடியட்' எனப் பெயரிட்டுள்ளனர்.
'தில்லுக்கு துட்டு', 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய படங்களை இயக்கியவர் ராம்பாலா. இரண்டு படங்களுமே வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் - வடிவேலு இணையும் படத்தை ராம்பாலா இயக்கவுள்ளார், 'டாவு' என்ற படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், அவை அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.
தற்போது ஸ்கிரீன் சீன் நிறுவனம், ராம்பாலா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின அறிவிப்பை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. இதில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
'இடியட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படமும் ஹாரர் காமெடி வகையிலான படம்தான். ராம்பாலாவின் முந்தைய இரண்டு படங்களுமே இதே ஹாரர் காமெடிதான் என்பது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago