அக்.25 முதல் 'வலிமை' படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

அக்டோபர் 25-ம் தேதி முதல் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், யுவன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

சென்னையில் படமாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட சண்டைக்காட்சியை, கரோனா ஊரடங்கு சமயத்தில் எடிட் செய்து பார்த்தது படக்குழு. அப்போது சில காட்சிகள் தேவைப்பட்டதைத் தொடர்ந்து, படப்பிடிப்புக்கு அனுமதியளித்த உடன் சென்னையில் அதனைக் காட்சிப்படுத்தியது. அதில் அஜித் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், அஜித் பங்கேற்கும் 'வலிமை' படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஒருவழியாக ஹைதராபாத்தில் 'வலிமை' படப்பிடிப்பு நாளை (அக்டோபர் 25) தொடங்குகிறது. இதில் அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவருமே பங்கேற்கிறார்கள்.

எத்தனை நாட்கள் படப்பிடிப்பு என்பதைப் படக்குழு முடிவு செய்யவில்லை. எந்தவிதப் பிரச்சினையுமின்றி நடந்தால் அப்படியே ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர். கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி அரங்குகளைச் சுத்தப்படுத்தும் பணிகள், படப்பிடிப்புக்கு முன்பு அனைவருக்குமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனத் தயாராகி வருகிறது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

55 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்