சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தனது உடலமைப்பை முழுமையாக மாற்றிவிட்டார் சிம்பு. சுமார் 20 கிலோ வரை குறைத்துள்ளார்.
மேலும், அவர் எந்தவொரு சமூக ஊடகத்திலும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு அனைத்து சமூக ஊடகங்களிடம் இருந்து சிம்பு விலகினார்.
சிம்பு மீண்டும் சமூக வலைதளத்துக்கு வர முடிவு செய்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்திலுமே மீண்டும் சிம்பு இணையவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் இன்று (22.10.20) சிம்பு ட்விட்டர் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார். இதற்கான ஒரு வீடியோவையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் செய்யும் உடற்பயிற்சி, சிலம்பம், நடனம் உள்ளிட்ட பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.
» 'தில்வாலே துல்ஹனியா...' படத்தை 2 முறைதான் பார்த்திருக்கிறேன்: கஜோல் நினைவுப் பகிர்வு
» புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டேன்: நடிகர் சஞ்சய் தத் பகிர்வு
சமீபகாலமாக வெளியான சிம்புவின் புகைப்படங்கள் உடல் எடை மிகவும் குறைந்து காணட்ப்பட்டார். இதனால் சமூக வலைதளங்களில் சிலர் அவர் உடல் எடையை குறைக்கும் ஊசி போன்றவற்றை பயன்படுத்தியதாக கூறிவந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த வீடியோவை சிம்பு வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago