இயக்குநராக அறிமுகமாகும் வரலட்சுமி சரத்குமார்

By செய்திப்பிரிவு

'கண்ணாமூச்சி' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்.

2012-ம் ஆண்டு 'போடா போடி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதனைத் தொடர்ந்து 'தாரை தப்பட்டை', 'விக்ரம் வேதா', 'சண்டக்கோழி 2', 'சர்கார்', 'மாரி 2' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமீபமாக தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் வரலட்சுமி நடித்து வருகிறார். தற்போது அவர் இயக்குநராக முடிவெடுத்து, தனது புதிய படத்தையும் அறிவித்துள்ளார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'கண்ணாமூச்சி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக கிருஷ்ண சாமி, இசையமைப்பாளராக சாம் சி.எஸ். ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

'கண்ணாமூச்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமியே பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். வரலட்சுமி இயக்குநராக அறிமுகமாகவுள்ளதை முன்னிட்டு, பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்