நான்தான் இந்தி திரைப்படத் துறையின் உண்மையான ஆக்ஷன் நாயகி என நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.
பாலிவுட் கடந்த காலத்தில் பல நாயகிகள் சண்டை போடுவதையும், ஆக்ஷன் படங்களில் நடிப்பதையும் பார்த்திருக்கிறது. ரேகா, ஜீனத் அம்மான், ஹேமமாலினி, ஸ்ரீதேவி எனப் பலர் அப்படி நடித்திருக்கின்றனர். தற்போது கங்கணா, நான்தான் உண்மையான ஆக்ஷன் நாயகி என்று கூறி புதிய சர்ச்சைக்கு அடித்தளம் போட்டிருக்கிறார்.
'தேஜஸ்' மற்றும் 'தாகட்' என இரண்டு திரைப்படங்களில் கங்கணா நடித்து வருகிறார். இரண்டுமே ஆக்ஷன் படங்கள் என்பதால் இதற்காகக் கடுமையான பயிற்சியில் கங்கணா ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார் கங்கணா. இதில் பாக்ஸிங், கிக் பாக்ஸிங் உள்ளிட்ட பல தீவிரமான பயிற்சிகளை கங்கணா மேற்கொள்கிறார்.
இதோடு, "வரப்போகும் 'தேஜஸ்', 'தாகட்' என இரண்டு படங்களுக்காகவும் நான் எனது சண்டைப் பயிற்சியைத் தொடங்கியிருக்கிறேன். முதல் படத்தில் ராணுவ அதிகாரியாகவும் இரண்டாவது படத்தில் உளவாளியாகவும் நடிக்கிறேன். பாலிவுட் எனக்கு நிறையக் கொடுத்திருக்கலாம். ஆனால், 'மணிகார்ணிகா'வுக்குப் பிறகு நானும் பாலிவுட்டுக்கு அதன் முதல் உண்மையான ஆக்ஷன் நாயகியைத் தந்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
சர்வேஷ் மேவரா இயக்கும் 'தேஜஸ்', இந்திய ராணுவத்துக்கு மரியாதை செலுத்தும் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 2021 வெளியீடு எனத் திட்டமிடப்பட்டுள்ளது. 'தாகட்' திரைப்படத்தை ரஸ்னீஷ் கை இயக்குகிறார். இவை தவிர ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கிலும் கங்கணா நடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago