தனுஷ்- அனிருத் கூட்டணி: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். அவர் இன்று (அக்டோபர் 16) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனைத் தொடர்ந்து அவருக்குப் பலரும் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் நிறுவனமும் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக, தனுஷ் நடிப்பில் உருவாகும் 44-வது படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பதை வீடியோ வடிவில் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ பதிவில் இயக்குநர் பெயர் இடம்பெறவில்லை. இந்தப் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 'அத்ரங்கி ரே', 'கர்ணன்', 'கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படம்', 'ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

மீண்டும் தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்திருப்பதால் இசை ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால், '3' படம் தொடங்கி 'தங்கமகன்' படம் வரை இணைந்து பணிபுரிந்து பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்தது தனுஷ் - அனிருத் கூட்டணி.

இருவருக்கும் இடையே பிரச்சினை, இனி இணைய வாய்ப்பில்லை என்று பரவிய வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கி மீண்டும் தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்