நீங்கள் சிங்கிளா என்று கேள்வி கேட்ட ரசிகருக்கு லட்சுமி மேனன் பதிலளித்துள்ளார்.
'சுந்தர பாண்டியன்', 'கும்கி', 'குட்டிப்புலி', 'பாண்டிய நாடு' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி மேனன். முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தனது கல்லூரிப் படிப்புக்காக திரையுலகிலிருந்து விலகினார். தற்போது படிப்புகளை முடித்துவிட்டு, உடல் எடையைக் குறைத்து, திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்து வரும் படத்தின் நாயகியாக லட்சுமி மேனன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை முத்தையா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ளார் என தகவல் பரவியது. அதற்கு மறுப்பு தெரிவித்தது மட்டுமன்றி, பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கடுமையாகச் சாடினார்.
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பார் லட்சுமி மேனன். அவ்வாறு ரசிகர் ஒருவர் "நீங்கள் சிங்கிளா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு லட்சுமி மேனன் இல்லை என்று பதிலளித்துள்ளார்.
லட்சுமி மேனனின் இந்தப் பதிலால், அவருடைய காதலர் யாராக இருக்கும் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago