எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் தான்யா ரவிசந்திரன்

By செய்திப்பிரிவு

எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் தான்யா ரவிசந்திரன் நடிக்கவுள்ளார்.

சசிகுமார் நாயகனாக நடித்த 'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதனைத் தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது மீண்டும் சசிகுமார் நடித்துள்ள 'கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிவுற்று வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. தனது அடுத்த படத்துக்கான பணிகளைக் கவனித்து வந்தார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

நாயகியை மையப்படுத்திய இந்தக் கதையில் தான்யா ரவிசந்திரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று (அக்டோபர் 9) சென்னையில் தொடங்கியது.

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என அனைத்துமே எஸ்.ஆர்.பிரபாகரன் தான். இதில் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ்ட் வெங்கட், ராம்நாத் ஷெட்டி, சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் உள்ளிட்ட பலர் தான்யா ரவிசந்திரன் உடன் நடித்து வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளராக கணேஷ் சந்தானம், கலை இயக்குநராக மைக்கேல் ராஜ், எடிட்டராக டான் பாஸ்கோ ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்