'க/பெ ரணசிங்கம்' திரைப்படம்' அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது.
விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'க/பெ ரணசிங்கம்'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் ஜீ ப்ளக்ஸில் இப்படம் வெளியிடப்பட்டது.
இயக்குநர் பாரதிராஜா, சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் படம் பார்த்தவர்கள் என அனைவருமே படக்குழுவினரைப் பாராட்டி தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் மட்டுமே இந்தப் படம் டி.டி.ஹெச்சில் வெளியானது.
தற்போது அக்டோபர் 15-ம் தேதியிலிருந்து திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துவிட்டது. இதனால், திரையரங்கில் வெளியிடுவதற்குத் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. அது சுமுகமாக முடியவே, திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது 'க/பெ ரணசிங்கம்'.
இது தொடர்பாக 'க/பெ ரணசிங்கம்' படத்தைத் தயாரித்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
''உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில். இதைச் சொல்ல எவ்வளவு நாட்கள் காத்திருந்தோம். எங்கள் அனைவருக்குமே இது உணர்ச்சிகரமான தருணம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களுக்குத் திரையரங்க அனுபவத்தைத் தர நாங்கள் மீண்டும் வந்திருக்கிறோம். 'க/பெ ரணசிங்கம்' திரைப்படத்தை அக்டோபர் 16 முதல் திரையரங்குகளில் பாருங்கள்".
இவ்வாறு கேஜேஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
44 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago