யோகி பாபு நாயகனாக நடித்துள்ள 'பேய் மாமா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு நகைச்சுவைப் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் ஷக்தி சிதம்பரம். இறுதியாக பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் நடித்த 'சார்லி சாப்ளின் 2' படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்துக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்க 'பேய் மாமா' என்ற படம் பேச்சுவார்த்தையில் இருந்தது.
இறுதியில், அந்தக் கதையில் யோகி பாபு நாயகனாக நடிக்கத் தொடங்கப்பட்டது. இதில் ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட பலர் யோகி பாபுவுடன் நடித்துள்ளனர். 'பேய் மாமா' படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் குமுளியில் படமாக்கி முடித்துள்ளார் ஷக்தி சிதம்பரம்.
தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
» 'மாநகரம்' இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி
» 'க/பெ ரணசிங்கம்' படத்துக்கு வரவேற்பு: படக்குழுவினருக்கு விருமாண்டி நன்றி
'தர்மபிரபு' படத்துக்குப் பிறகு யோகி பாபு நாயகனாக நடித்துள்ள படம் இதுவாகும்.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago