முத்தையா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார்.
கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'தேவராட்டம்' படத்தைக் கடைசியாக இயக்கியிருந்தார் முத்தையா. அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
மீண்டும் கெளதம் கார்த்திக் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார், கார்த்தி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால், இறுதியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்கி வருகிறார் முத்தையா.
இதன் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விக்ரம் பிரபு நடித்து வரும் இந்தப் படத்தில் நாயகியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இந்தப் படம் திரையரங்க வெளியீடு அல்லாமல் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பும், சன் நெக்ஸ்டிலும் வெளியாகவுள்ளது.
» ’’பாக்யராஜிடம் நான் கற்றுகொண்டது என்னன்னா..’’ - இயக்குநர் பாரதிராஜாவின் மனம் திறந்த பேட்டி
» தன்பாலின முத்தக் காட்சியை சென்சார் செய்த இந்திய சேனல்: இயக்குநர் சாடல்
குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகும் இந்தப் படம் பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது. இதற்கு 'பேச்சி' என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago