நவம்பர் முதல் வாரத்தில் 'மாநாடு' படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் படப்பிடிப்பின் போதுதான் கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டது.
இந்தப் படத்தின் கதைப்படி, ஒவ்வொரு காட்சியிலும் அதிகப்படியான நடிகர்கள் உள்ளதால் இதன் படப்பிடிப்பு தாமதமானது. 'மாநாடு' படப்பிடிப்பு எப்போது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் "தடைகள் உடைத்து, கரோனா பாதிப்புகள் கடந்து, மாநாடு நவம்பர் முதல் வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
» ‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ தொடரில் இணைந்த பிரபல நடிகர்
» ‘கரோனா வைரஸைக் கண்டு அஞ்ச வேண்டாம்’ - ட்ரம்ப் ட்வீட்; கேப்டன் அமெரிக்கா நடிகர் கடும் சாடல்
'மாநாடு' தயாரிப்பாளரின் அறிவிப்பால், சிம்பு ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடிக்கவுள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ப்ரவீன் கே.எல். எடிட் செய்யவுள்ளார். யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.
நவம்பரில் 'மாநாடு' படப்பிடிப்பு தொடங்கும் முன், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி படத்தில் நடித்து முடிக்கவுள்ளார் சிம்பு. திண்டுக்கல்லில் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago