நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் 'க/பெ. ரணசிங்கம்': சூர்யா

By செய்திப்பிரிவு

நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் 'க/பெ. ரணசிங்கம்' என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'க/பெ ரணசிங்கம்'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் ஜீ ப்ளக்ஸில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. பல்வேறு முன்னணி இயக்குநர்கள் 'க/பெ ரணசிங்கம்' பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள்.

தற்போது 'க/பெ ரணசிங்கம்' பார்த்துவிட்டு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் ’க/பெ. ரணசிங்கம்’. இயக்குநர் விருமாண்டி, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் ஜிப்ரான், பவானி ஸ்ரீ, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்"

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா தவிர்த்து இயக்குநர் பாண்டிராஜ், சேரன் உள்ளிட்ட பலரும் இயக்குநர் விருமாண்டி உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்