நரேன் - சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செய லாளர் வைகோ சமீபத்தில் பார்த்தார். இப்படம் அவருக்கு பிடித்துப் போனதால் தனது சொந்த செலவிலேயே ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் மற்றொரு பிரத்யே கக் காட்சிக்கு ஏற்பாடு செய்த வைகோ, படத்தைப் பார்வையிட இயக்குநர் பாரதி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, தோழர் தியாகு, வழக்கறிஞர் சங்கர சுப்பு உள்ளிட்ட பல பிரமுகர்களை அழைத்திருந்தார்.
கத்துக்குட்டி படத்தைப் பார்த்து இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது:
ஒரு படத்தைப் பார்க்க வைகோ அழைக்கிறார் என்றாலே அந்தப் படம் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை என்னால் யோசிக்க முடிந்தது. காரணம், வைகோ அந்தளவுக்குத் தேர்ந்த சினிமா ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பா கக் கவனிக்கக் கூடியவர். அதனால் ‘கத்துக் குட்டி’ படத்தில் ஏதோ ஒரு நல்ல விஷயம் நிச்சயம் இருக்கும் என நம்பித்தான் படத்தை பார்க்க வந்தேன். ஒரு நல்ல விஷயம் அல்ல. பல நல்ல விஷயங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி யோடு கலகலப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சரவணன். குறிப்பாக படத்தில் சூரியின் காமெடி மிகச் சிறப்பாக உள்ளது. வசனங்கள் ஒவ்வொன்றும் கூர்மையாக உள்ளன.
தஞ்சை மக்களின் கொண்டாட்டங்களை யும் கூடவே அவர்களின் அன்றாடத் துயரங்களையும் மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கும் ‘கத்துக்குட்டி’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைய வேண் டும். இந்தப் படத்தை ஜெயிக்க வைக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை.
இவ்வாறு பாரதிராஜா கூறினார்.
வைகோ கூறும்போது, “அரசியல் கட்சி களின் போராட்டங்களால் சாதிக்க முடியாததை ஒரு திரைப்படத்தால் சாதிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தம்பி இரா.சரவணன். கிராமத்து வாழ்வியலை அவ்வளவு சிறப்பாக ‘கத்துக்குட்டி’ படம் பதிவு செய்துள்ளது. முள்ளி வாய்க் கால் கொடுமைக்குப் பிறகு நான் படம் பார்ப்பதை அடியோடு குறைத்துக் கொண் டேன். ஆனால், ‘கத்துக்குட்டி’ படத்தை சில நாட்களுக்குள்ளேயே இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். இந்தப் படத்தின் அடிநாதமான விவசாயப் பிடிப்பான கதையும், திரைக்கதைத் திருப்பங்களும், நுட்பமான வசனங்களும், கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியமைப்புகளும், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி யான கருத்துச் சொல்லும் பாணியும் என்னை இந்தப் படத்தின் பெரிய ரசிகனாக்கிவிட்டன. ‘கத்துக்குட்டி’ தரணி போற்றும் தஞ்சை தமிழ் மக்களின் பேரழகான காவியம் என்றால் அதில் கொஞ்சமும் மிகை இல்லை” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறும்போது, “மக்களின் வலியைப் பேசுகின்ற படங்கள் பெரிதாக ஓடுவது கிடையாது. இந்த விஷ யத்தை நன்றாகப் புரிந்துகொண்டு சொல் லும் விதமாகச் சொன்னால் எதையும் சரியாகச் சொல்லலாம் என நிரூபித்திருக் கிறார் ‘கத்துக்குட்டி’ இயக்குநர். விவசாய மக்களின் துயரங்களை இவ்வளவு ஆழ மாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருப் பதும், அதனை அனைத்து தரப்பிலான மக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் நகைச்சுவையாகச் சொல்லி யிருப்பதும் பாராட்டத்தக்கது” என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, “இந்த படத்தில் சொல்லப்படாத அரசியல் இல்லை. பேசப்படாத பிரச்சினைகள் இல்லை. அலசப்படாத விவாதங்கள் இல்லை. ஆனால், இவ்வளவு விஷயங் களையும் சீரியஸாகச் சொல்லாமல் இயல்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்கு நர் சரவணன்” என்றார்.
‘கத்துக்குட்டி’ திரைப்படம் அக்டோபர் முதல் தேதி திரைக்கு வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago