கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

தனது கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார் என்று பாண்டிராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இன்று (செப்டம்பர் 28) இயக்குநர் சசிகுமார் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திரையுலகப் பிரபலங்கள் பலரும் சசிகுமாருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சசிகுமார் தயாரிப்பில் வெளியான 'பசங்க' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். தற்போது முன்னணி இயக்குநராக வலம்வரும் பாண்டிராஜ், சசிகுமாருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

"உங்கள் வாழ்க்கையை மாற்றிய நபரை, கனவுக்கு உயிர் கொடுத்தவரை, உங்கள் வலி மிகுந்த காலங்களில் உங்களுக்காக அக்கறை காட்டியவரை, என்ன சொல்லி அழைப்பீர்கள்?

எஜமானர், நண்பர், அக்கறையுடன் கவனித்துக் கொள்பவர், நல விரும்பி என் வாழ்க்கையில் இந்த எல்லா விஷயங்களையும் சசிகுமார் செய்துள்ளார்".

இவ்வாறு பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்