ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் பூமி

By செய்திப்பிரிவு

ஜெயம் ரவியின் 'பூமி' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

'கோமாளி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படமான 'பூமி' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் ஜெயம் ரவி. சுஜாதா விஜயகுமார் தயாரித்து வரும் இந்தப் படம் ஜெயம் ரவியின் 25-வது படமாகும்.

மே 1-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இன்னும் ஒருசில காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளது. தற்போது முடியும் தருவாயில் உள்ள படங்களை ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் 'பூமி' படக்குழுவினரிடம் ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. நேற்று (செப்டம்பர் 27) மாலை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் 'பூமி' படத்தின் உரிமையைக் கைப்பற்றிவிட்டதாகத் தகவல் வெளியானது.

இது தொடர்பாக விசாரித்தபோது, " 'பூமி' படக்குழுவினரிடம் பல்வேறு ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான். ஆனால், எந்த ஓடிடியில் வெளியீடு என்பது இன்னும் வெளியாகவில்லை. ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தபின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்கள்.

லஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பூமி' படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டெட்லி ஒளிப்பதிவாளராகவும், இமான் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

'பூமி' படத்தை முடித்துவிட்டு, மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஜெயம் ரவி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

34 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்