இந்தியில் ரீமேக்காகிறது 'மாநகரம்': சந்தோஷ் சிவன் இயக்குகிறார்

By செய்திப்பிரிவு

இந்தியில் 'மாநகரம்' திரைப்படம் ரீமேக் ஆகிறது. இதனை சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளார்.

2017-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி வெளியான படம் 'மாநகரம்'. இதன் மூலமாக லோகேஷ் கனகராஜ்இயக்குநராக அறிமுகமானார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மதுசூதனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு பிறகே 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கி முன்னணி இயக்குநராக உள்ளார். இதில் 'மாஸ்டர்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், 'கைதி' படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்று இந்தியில் ரீமேக் ஆகிறது.

இதனிடையே, 'மாநகரம்' படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள இந்தப் படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். இவர் 'புலி', 'இருமுகன்', 'சாமி ஸ்கொயர்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களையும், சில மலையாளப் படங்களையும் தயாரித்துள்ளார்.

'மாநகரம்' இந்தி ரீமேக்கில் ஒரு நாயகனாக விக்ராந்த் மாசே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு நாயகன் மற்றும் நடிகர் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. முழுக்க மும்பையிலேயே படமாக்கப்படும் வகையில் இதன் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது. 50 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்