மீண்டும் படப்பிடிப்பில் 'மைனா' நந்தினி

By செய்திப்பிரிவு

குழந்தை பிறந்த கொஞ்ச நாட்களிலேயே படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் 'மைனா' நந்தினி.

தமிழ் சீரியல்களில் பிரபலமானவர் 'மைனா' நந்தினி. சில படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருக்கும் யோகேஸ்வரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. நடிகர் மற்றும் நடன இயக்குநராக யோகேஸ்வரன் வலம் வருகிறார். யோகேஸ்வரன் - நந்தினி தம்பதியினருக்கு செப்டம்பர் 5-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இதனிடையே, யோகேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நந்தினியுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து "நிஜ தம்பதியினர் இப்போது சீரியலிலும் தம்பதியராக. பாண்டியன் ஸ்டோர்ஸ்" என்று குறிப்பிட்டுள்ளார். அனைத்தையுமே ஹேஷ்டேக் முறையிலேயே பதிவிட்டுள்ளார்.

'மைனா' நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், படப்பிடிப்புத் தளத்தின் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதனுடன் "ரெடி. கேமரா ரோலிங் சார். ஷூட்டிங் தொடங்கியது" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் நந்தினி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளது உறுதியாகியுள்ளது.

ஆனால், குழந்தை பிறந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், நந்தினி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்