விஜய் - வெற்றிமாறன் இருவருமே இணைந்து பணிபுரிய விரும்புவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்னும் சில முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரியவில்லை. அதில் முக்கியமான இயக்குநர் வெற்றிமாறன். இருவரும் இணைந்து பணிபுரிய பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், அது அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.
'அசுரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகும் கூட விஜய் - வெற்றிமாறன் சந்திப்பு நடந்தது. ஆனால், படமாக அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இதனிடையே ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வடிவில் நேற்று (செப்டம்பர் 20) பதிலளித்தார் ஜி.வி.பிரகாஷ்.
அப்போது விஜய் - வெற்றிமாறன் இணைந்து பணிபுரிய வாய்ப்பு உருவாகியுள்ளதை உறுதி செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ். ஏனென்றால், வெற்றிமாறன் படங்களுக்குத் தொடர்ச்சியாக இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ்.
தற்போது, "விஜய் - வெற்றிமாறன் படங்கள் நடந்தால் கண்டிப்பாக நீங்கள் இல்லாமல் நடக்காது. அது எப்போது?” என்ற கேள்வியை ஜி.வி.பிரகாஷிடம் ரசிகர் ஒருவர் கேட்டார்.
அதற்கு ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது:
"கண்டிப்பாக. அது அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு கூட்டணி. இருவருமே இணைந்து பணிபுரிய விரும்புகிறார்கள். அதற்கான நேரம்தான் இருவருக்கும் பொருந்தாமல் உள்ளது. இருவருடைய படங்களை வைத்துப் பார்த்தால் 2021 அல்லது 2022-ல் இணைய வாய்ப்புள்ளது".
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago