லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு கமல் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்காக முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது கமல் நடிப்பில் உருவாகும் 232-வது படமாகும்.
முன்னதாக, 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இதனால் லோகேஷ் கனகராஜ் - விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே நல்லதொரு நட்பு இருக்கிறது. மேலும், கமலுடன் நடிக்க ஆசைப்படுவதாகப் பல மேடைகளில் கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
இதனை வைத்து கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்று பலரும் கருதினார்கள்.
» என் மீது பாயல் கோஷ் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - அனுராக் காஷ்யப் மறுப்பு
» இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் #MeToo புகார்
ஆனால் இது தொடர்பாக விசாரித்த போது, "கமல் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. இது வெறும் வதந்தி தான்" என்று தெரிவித்தார்கள். தற்போது கமல் படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago