சினிமாவை விட்டுவிடச் சொன்ன ரசிகருக்கு லட்சுமி மேனன் பதிலடி

By செய்திப்பிரிவு

சினிமாவை விட்டுவிடச் சொன்ன ரசிகருக்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார் லட்சுமி மேனன்.

'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். பின்பு 'கும்கி', 'பாண்டியநாடு', 'மஞ்சப்பை', 'ஜிகர்தண்டா', 'கொம்பன்', 'வேதாளம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

பிரபுதேவாவுடன் நடித்த 'யங் மங் சங்' படத்துக்குப் பிறகு திரையுலகிலிருந்து ஒதுங்கினார். படிப்பு, நடனம் எனக் கவனம் செலுத்தி வந்த லட்சுமி மேனன், தற்போது முழுமையாக உடல் எடையைக் குறித்து மீண்டும் நாயகியாக நடிக்கவுள்ளார்.

பல இயக்குநர்கள் அவரிடம் கதைகள் கூறிவருகிறார்கள். அவர் ஒப்பந்தமாகியுள்ள படம் தொடர்பாக இன்னும் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்புமே வெளியாகவில்லை. ஆனால், அவருடைய புகைப்படங்கள், நடன வீடியோக்கள் என இணையத்தில் வைரலாகி வருகின்றன.

லட்சுமி மேனனின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு ரசிகர் ஒருவர், "அழகாக இருக்கிறீர்கள், யாரையேனும் திருமணம் செய்துகொண்டு தயவுசெய்து அமைதியான வாழ்க்கையை வாழுங்கள். சினிமாவை விட்டுவிடுங்கள். நீங்கள் ஒரு தேவதை" என்று தகவல் அனுப்பியுள்ளார்.

அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவருடைய தகவலைப் பகிர்ந்து, "என்னுடைய பணிவான, அன்பான, பாசமான இந்த நலம்விரும்பி, என்னைப் போன்ற ஒரு தேவதை யாரையேனும் திருமணம் செய்துகொண்டு அமைதியைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். பரிதாபகரமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார் லட்சுமி மேனன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்