தனது போட்டோ ஷூட்டைக் கிண்டல் செய்தவர்களுக்கு, இன்ஸ்டாகிராம் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார் ஜூலி.
ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர் ஜூலி. அதனைத் தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். எப்போதுமே சமூக வலைதளத்தில் ஆற்றலுடன் இயங்கி வருபவர் ஜூலி.
சில தினங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவரை ஜூலி திருமணம் செய்யவுள்ளார் என்று தகவல் பரவியது. இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்.
கரோனா ஊரடங்கில் வித்தியாசமான கெட்டப்களில் போட்டோ ஷூட் எடுத்து, அதை தனது சமூக வலைதளத்தில் ஜூலி வெளியிட்டு வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது முழுக்க கறுப்பு மை, கோல்டன் கலர் மை ஆகியவற்றைப் பூசி போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து ஜூலி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாகப் பலரும் ஆதரவாகவும், கிண்டல் செய்தும் கருத்துகள் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்த போட்டோ ஷூட் உருவான விதத்துக்கான வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்து ஜூலி கூறியிருப்பதாவது:
"கேலி செய்பவர்கள் கேலி செய்வார்கள். ஆனால், வெற்றியாளர்கள் முன்னேறிச் சென்று விடுவார்கள். இறுதியில் இது கேலி செய்யப்படும் என்று நாங்கள் அறிவோம். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் பற்றியெல்லாம் யாருக்கும் கவலை இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அடுத்தவரின் உழைப்பைக் கேலி செய்யவேண்டும். பரவாயில்லை. இதைச் செய்தோம், நிரூபித்தோம் என்பதில் எங்களுக்குப் பெருமை".
இவ்வாறு ஜூலி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago