கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மாயாபஜார் 2016' படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது.
ராதாகிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் ராஜ் பி.ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சுதா ராணி, அச்யூத் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கன்னடப் படம் 'மாயாபஜார் 2016'. அஸ்வினி புனித் ராஜ்குமார் மற்றும் கோவிந்தா இணைந்து தயாரித்த இந்தப் படம் க்ரைம் காமெடி பாணியிலான படமாகும்.
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குநர் சுந்தர்.சி கைப்பற்றினார். இதன் ரீமேக் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்தன.
சென்னையில் இன்று (செப்டம்பர் 14) முதல் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். இந்தப் படத்தை 'வீராப்பு', 'தம்பிக்கு எந்த ஊரு' மற்றும் 'தில்லு முல்லு' ஆகிய படங்களை இயக்கிய பத்ரி இயக்கி வருகிறார்.
இதில் பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகி பாபு, விடிவி கணேஷ், ரித்திகா சென் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இன்று பிரசன்னா நடிக்கும் காட்சிகளுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளராக கிச்சா, இசையமைப்பாளராக சத்யா, கலை இயக்குநராக ப்ரேம் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
29 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago