அக்டோபர் மாதம் முதல் 'வலிமை' படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது தமிழக அரசு 75 பேருடன் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில படங்கள் மட்டுமே படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர்.
முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவுமே இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தற்போது அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பைத் தொடங்க 'வலிமை' படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இது தொடர்பாக அனைத்து நடிகர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» நீட் தேர்வுக்கு எதிராக சமூகமாக ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்: சூர்யா அறிக்கை
» ரஜினி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: லாரன்ஸ் வேண்டுகோள்
மேலும், வெளிநாட்டில் எடுக்கத் திட்டமிட்டு இருந்த காட்சிகள் அனைத்தையும் இந்தியாவிலேயே படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போதைய சூழல்படி முன்பாக திட்டமிடப்பட்ட தீபாவளி வெளியீடு சாத்தியமில்லை என்பதால், 2021 கோடை விடுமுறை வெளியீடு எனத் திட்டமிட்டுள்ளது 'வலிமை' படக்குழு.
இந்தப் படத்தில் அஜித்துடன் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. மீதி யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்துள்ளது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago