ஸ்ரேயா சரண் நடித்துள்ள 'கமனம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

ஸ்ரேயா சரண் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'கமனம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். தமிழில் ரஜினி, விஜய் என முன்னணி நாயகர்களுக்கு நாயகியாக நடித்துள்ளார். 2018-ம் ஆண்டு தனது காதலரைத் திருமணம் செய்து கொண்டாலும், தொடர்ச்சியாக திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது தெலுங்கில் ராஜமெளலி இயக்கத்தில் 'ஆர்.ஆர்.ஆர்', தமிழில் 'நரகாசூரன்', 'சண்டக்காரி' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே, ஸ்ரேயா சரண் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய படமொன்று இன்று (செப்டம்பர் 11) அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு 'கமனம்' எனப் பெயரிட்டுள்ளனர். ஸ்ரேயா சரண் பிறந்த நாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் க்ரிஷ்ன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

இளையராஜா இசையமைப்பில் உருவாகும் இந்தப் படம், நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாகும். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் தயாராகி வருகிறது.

'கமனம்' படத்தின் ஒளிப்பதிவாளராக ஞான சேகர் வி.எஸ் பணிபுரிந்துள்ளார். அதோடு மட்டுமில்லாது ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி ஆகியோருடன் இணைந்து தயாரித்தும் உள்ளார். பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார்.

'கமனம்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்