விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'க/பெ ரணசிங்கம்' ஓடிடி வெளியீட்டை உறுதி செய்தது.
ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'க/பெ. ரணசிங்கம்'. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன்தான் இயக்குநர் பெ.விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் 'பூ' ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரிந்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது எனத் தகவல் பரவியது. ஆனால், படக்குழுவினரோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று மட்டும் குறிப்பிட்டார்கள்.
» நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்
» ஜெயம் ரவி பிறந்தநாள் ஸ்பெஷல்: அனைத்திலும் சிறந்து விளங்கும் நாயக நடிகர்
தற்போது, 'க/பெ. ரணசிங்கம்' திரைப்படம் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இது திரையரங்குகள் பாணியில் காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையாகும். இந்தப் பாணியில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக 'க/பெ. ரணசிங்கம்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான வீடியோ பதிவினை ஜீ ப்ளக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. 'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து, மற்றொரு எதிர்பார்ப்புக்குரிய படமாக 'க/பெ. ரணசிங்கம்' ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago