லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் எனத் தெரிகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகவில்லை. திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்போதைக்கு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.
'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் 50-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் எனத் தகவல் வெளியானது. இதில் ரஜினி நாயகனாக நடிக்கவுள்ளார் எனவும் குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக விசாரித்தபோது உறுதியும் செய்தார்கள்.
ஆனால், இந்தக் கரோனா அச்சுறுத்தல் தற்போது அனைத்தையும் மாற்றியுள்ளது. இன்னும் 'அண்ணாத்த' பணிகளே நிறைய இருப்பதால், ரஜினி உடனடியாக லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை. ஆனால், ராஜ்கமல் நிறுவனத்துக்காக லோகேஷ் கனகராஜை ஒப்பந்தமும் செய்துவிட்டார்கள்.
இந்த ஒப்பந்தத்தை வைத்து, கமல் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். முழுக்க சென்னையிலேயே படப்பிடிப்பு செய்யக் கூடிய வகையில், கமலுக்கு ஏற்றவாறு ஒரு த்ரில்லர் கதையைத் தயார் செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பை டிசம்பரில் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அனைத்தையும் எதிர்பார்த்தபடியே முடிவடைந்தால், இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். கமல் படத்துக்கான திரைக்கதையை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
கமல் படத்தை இயக்கவுள்ளதால், கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவாரா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க ஏற்கெனவே ஒப்பந்தமாகிவிட்டார் லோகேஷ் கனகராஜ். கமல் படத்தை முடித்துவிட்டு, அதன் பணிகளைத் தொடங்கவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago