'பிக் பாஸ்' சீசன் 3-ல் வெற்றி பெற்ற முகென் ராவ், தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
2011-ம் ஆண்டு நானி, கார்த்திக் குமார், நித்யா மேனன், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வெப்பம்'. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அஞ்சனா. அந்தப் படத்துக்கு பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார்.
தற்போது, தனது அடுத்தப் படத்தின் பணிகளை மும்முரமாகத் தொடங்கிவிட்டார் அஞ்சனா. இதில் நாயகனாக முகென் ராவ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் 'பிக் பாஸ்' சீசன் 3-ல் வெற்றி பெற்றவர். இவருக்குப் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.
இசை ஆல்பங்களில் நடித்திருந்தாலும், அஞ்சனா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் நாயகியாக திவ்யா பாரதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'பேச்சிலர்' படத்தில் நாயகியாக நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
» வசந்தகுமாரின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது: ரஜினி
» அப்பாவின் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம்; அனைத்தும் நல்ல அறிகுறிகளே: எஸ்பிபி சரண்
முகென் ராவ், திவ்யா பாரதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago