செப்டம்பர் 6-ம் தேதி ஆரவ் தனது காதலியான ராஹியைத் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ். 2017-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர். அந்த நிகழ்ச்சிக்கு முன்பாக 'ஓ காதல் கண்மணி' மற்றும் 'சைத்தான்' ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் மூலம் பிரபலமானதைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே ஓவியாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் கூட ஆரவ் - ஓவியா இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதனிடையே தற்போது ஆரவ் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
» தமன்னாவின் பெற்றோருக்குக் கரோனா தொற்று
» சிவாஜி - டி.எம்.எஸ். ஜோடி இணைந்து 66 ஆண்டுகள்; ’தூக்குதூக்கி’யில் இருந்து ‘டேக் ஆஃப்’
தன் காதலி ராஹியை செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் திருமணம் செய்யவுள்ளார் ஆரவ். கெளதம் மேனன் இயக்கி வரும் 'ஜோஷ்வா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் ராஹி. இவர் ஆடை வடிவமைப்பாளரும் கூட.
ஆரவ் - ராஹி இருவரும் நீண்ட காலமாகக் காதலித்து வருவதாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கொரு காதலி இருப்பதாக ஆரவ் சொன்னது இவரைத்தான் என்றும் அவருடைய நண்பர்கள் தெரிவித்தார்கள். ஆரவ் - ராஹி திருமணம் இருவரது வீட்டார் சம்மதத்துடன் நடைபெறுகிறது.
கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகினருக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் ஆரவ் - ராஹி ஜோடி திட்டமிட்டுள்ளது. ஆரவ் - ராஹி திருமணம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
41 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago