சமூக வலைதளத்தில் பரவிய புகைப்படங்களால், கன்னடத் திரையுலகில் யோகி பாபு அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் பரவிவருகிறது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது 'டிக்கிலோனா', 'அடங்காதே', 'ஜகஜால கில்லாடி', 'பன்னிக் குட்டி', 'மண்டேலா', 'டாக்டர்', 'வெள்ளை யானை', 'கடைசி விவசாயி' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சில தினங்களாக சமூக வலைதளத்தில் பரவிய புகைப்படத்தால் கன்னடத்தில் யோகி பாபு அறிமுகமாகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஏனென்றால், இதற்கு முன்பாக இந்தியில் ஷாரூக்கானுடன் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. தெலுங்கிலும் நடித்துள்ளார். ஆகையால், கன்னடத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது. ஏனென்றால் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், துனியா விஜய் ஆகியோருடன் யோகி பாபு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக யோகி பாபு தரப்பில் விசாரித்த போது, "அவை நிகழ்ச்சிக்கு ஒன்றுக்குச் சென்ற போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். இப்போதைக்கு கன்னடத்தில் நடிக்கும் எண்ணம் யோகி பாபுக்கு இல்லை. ஆனால் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட அனைவருமே நாம் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அது எப்போது இருக்கும் என்று தெரியாது" என்று தெரிவித்தார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago