தமிழில் ரீமேக் ஆகிறது 'ஆர்டிகிள் 15': அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி

By செய்திப்பிரிவு

இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆர்டிகிள் 15' திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார்.

அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி இந்தப் படம் வெளியானது.

இதில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து தமிழில் யாரை வைத்து ரீமேக் பண்ணலாம் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இன்று (ஆகஸ்ட் 22) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'ஆர்டிகிள் 15' ரீமேக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தினை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. உதயநிதி ஸ்டாலின் உடன் வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்