சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 'ஆச்சாரியா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி இன்று (ஆகஸ்ட் 22) தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ஒட்டுமொத்தத் திரையுலகினருமே பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகி வரும் 'ஆச்சாரியா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டது. இதனை சிரஞ்சீவி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் யாரெல்லாம் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறார்கள் என்பதைப் படக்குழு அறிவிக்கவில்லை. நாயகியாக த்ரிஷா நடிப்பதாக இருந்தது. அவர் விலகவே, அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
» 'சூர்யவன்ஷி' மற்றும் '83' படங்கள்: ஓடிடி தளத்தில் வெளியாகின்றனவா?
» அமேசான் ப்ரைம் தளத்தில் 'சூரரைப் போற்று' ரிலீஸ் ஏன்? அடுத்தடுத்த திட்டங்கள்?- சூர்யா விளக்கம்
ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் மீதமுள்ள காட்சிகள் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago